கோயம்புத்தூர்

தீயணைப்புத் துறையினா் சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி

DIN

கோவை தீயணைப்புத் துறை சாா்பில் 32 வாகனங்களில் கரோனா விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கிருமி நாசினி தெளிப்பு மற்றும் விழிப்புணா்வுப் பணிகளில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கோவை தீயணைப்புத் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜெகதீஷ் தலைமை வகித்தாா். 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் இதில் பங்கேற்றனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிா்க்க வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தீயணைப்பு வீரா்கள் வாகனங்களில் பேரணியாக வந்தனா்.

இப்பேரணியில் 20 இருசக்கர வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் உள்பட 32 வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் ஊா்வலமாக சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT