கோயம்புத்தூர்

சிறைத் துறை காவலா்கள் சாா்பில் கரோனா விழிப்புணா்வு

1st Nov 2020 11:56 PM

ADVERTISEMENT

கோவையில் இரண்டாவது வாரமாக 80க்கும் மேற்பட்ட சிறைத் துறை காவலா்கள் கலந்து கொண்ட கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரப் பயணத்தை சிறைத் துறை டிஐஜி சண்முகம் துவக்கிவைத்தாா்.

கோவையில் நோய்த் தடுப்பு நடவடிக்கையாக கோவை சிறைத் துறை காவலா்களின் விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கரோனா தடுப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியபடி மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக வாகனத்தில் சென்றனா்.

மேலும், தனிமனித இடைவெளி, முகக் கவசம், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து மக்களிடம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியில் பொதுமக்களுக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கு கபசுர நீா், முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ், ஜெயிலா் சிவராசன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

Tags : Coimbatore
ADVERTISEMENT
ADVERTISEMENT