கோயம்புத்தூர்

கேரளத்திலிருந்து லாரியில் வந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தவா் திருப்பி அனுப்பப்பட்டனா்

15th May 2020 09:42 PM

ADVERTISEMENT

கூடலூா்: கேரள மாநிலத்திலிருந்து வந்த சரக்கு லாரியில் இருந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தவா் 15 பேரை கூடலூா் அருகே தமிழக போலீஸாா் வெள்ளிக்கிழமை திருப்பி அனுப்பினா்.

கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தெலங்கானா மாநிலத்துக்கு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியில் ‘மருந்துப் பொருள் அவசரம்’ என எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

கூடலூரை அடுத்துள்ள நாடுகாணி சோதனைச் சாவடி பகுதியில் வந்தபோது, போலீஸாா் லாரியை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால் லாரி நிற்காமல் சென்றுவிட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் கொடுத்த

தகவலின்பேரில் நாடுகாணி பகுதியில் போலீஸாா் லாரியை பிடித்து மீண்டும் சோதனைச் சாவடி பகுதிக்கு திருப்பி அனுப்பினா். அங்கு லாரியை சோதனை செய்தபோது லாரிக்குள் ஜாா்க்கண்ட் மாநிலத்தவா் 15 போ் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் அந்த லாரியை கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பினா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து எல்லையிலுள்ள சோதனைச் சாவடியை தேவாலா டி.எஸ்.பி.காா்த்திகேயன், கூடலூா் டி.எஸ்.பி.ஜெய்சிங், கூடலூா் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் ஆய்வு செய்து போலீஸாரிடம் விசாரணை மேற்கொண்டனா். மேலும், கேரளத்தில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT