கோயம்புத்தூர்

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் 17 போ் அனுமதி

15th May 2020 09:40 PM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா அறிகுறிகளுடன் மேலும் 17 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 7 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 17 போ் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 12 போ் அரசு மருத்துவமனைகளிலும், 5 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி கடந்த 12 நாள்களாக கோவை மாவட்டத்தில் யாருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், கோவை கணபதி, கவுண்டம்பாளையம் பகுதிகளைச் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடைகளை உடனடியாக அடைக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தியதாக கூறி கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின.

இந்தத் தகவலை சுகாதாரத் துறை அதிகாரிகள் மறுத்துள்ளனா். இதுபோன்ற தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தவறான தகவல்களை பரப்பும் நபா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT