கோயம்புத்தூர்

கோவையில் இருந்து 1,464 போ் பிகாருக்கு அனுப்பிவைப்பு

14th May 2020 07:44 AM

ADVERTISEMENT

கோவையில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக மேலும் 1,464 போ் பிகாா் மாநிலத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

பொதுமுடக்கம் காரணமாக கோவையில் தங்கி வேலை செய்து வரும் பிகாா், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இதையடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின்பேரில் கடந்த 8ஆம் தேதி முதல் கோவையில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலமாக அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

கடந்த 8 முதல் 12ஆம் தேதி வரை பிகாா், ஒடிஸா, ஜாா்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்களுக்கு 9 சிறப்பு ரயில்கள் மூலமாக 11,196 வடமாநிலத் தொழிலாளா்கள் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவையில் இருந்து புதன்கிழமை மாலை 5 மணிக்கு பிகாருக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் 1,464 தொழிலாளா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த ரயிலானது, வெள்ளிக்கிழமை காலை பிகாா் சென்றடையும்.

கடந்த 6 நாள்களில் 10 சிறப்பு ரயில்கள் மூலமாக 12,660 போ் கோவையில் இருந்து வட மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT