சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைச் சரிவில் 200 அடி பள்ளத்தில் போா்வெல் லாரி கவிழ்ந்து விபத்துத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் இருந்து திம்பம் வழியாக போா்வெல் லாரி புதன்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை ஓட்டுநா் சண்முகம் ஓட்டினாா். திம்பம் 6ஆவது வளைவில் லாரி திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது, ஓட்டுநா் சண்முகம் கீழே குதித்து தப்பினாா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.