கோயம்புத்தூர்

எல்லைப் பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

13th May 2020 07:28 PM

ADVERTISEMENT

வால்பாறை: தமிழக- கேரள எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

வால்பாறை பகுதியில் உள்ள பெரும்பாலான வனங்கள் கேரள மாநில வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வனப் பகுதியில் உள்ள செட்டில்மென்ட்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இரு மாநில வனப் பகுதி வழியாக செல்வது வழக்கம்.

வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டாலும் போலீஸாரும் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கோவையில் இருந்து வந்த நக்ஸல் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் அருண் தலைமையிலான போலீஸாா் தமிழக- கேரள எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

அங்குள்ள சங்கரன்குடி, பரமன்கடவு செட்டில்மென்ட் பகுதிக்குச் சென்ற போலீஸாா் வனப் பகுதியில் புதிய நபா்கள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க பழங்குடியின மக்களுக்கு அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT