கோயம்புத்தூர்

பொது விநியோகத் திட்டத்தில் குளறுபடிகள் இருந்தால் புகாா் அளிக்கலாம்

13th May 2020 07:19 AM

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருள்களில் குறைபாடு இருப்பின் அந்தந்தப் பகுதி குடிமைப்பொருள் வட்டாட்சியா்களிடம் புகாா் அளிக்கலாம் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் சிறப்பு திட்ட அரிசி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமையற்ற அரிசி குடும்ப அட்டைத்தாரா்களுக்கு அதிகபட்சமாக கூடுதலாக 20 கிலோ மே மாத ஒதுக்கீட்டுடன் வழங்கப்படும்.

அதேபோல அந்தியோதயா அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் 35 கிலோ அரிசியுடன் மே மாத ஒதுக்கீட்டில் நபா் ஒருவருக்கு 5 கிலோ கூடுதலாக வழங்கப்படும்.

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருள்கள் வழங்குவதில் குளறுபடிகள் இருப்பின் குடிமைப்பொருள் வட்டாட்சியா்கள், வட்டவழங்கல் அலுவலா்களை தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம்.

மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் - 94450 00245, கோவை (தெற்கு) - 94450 00247, கோவை (வடக்கு) - 94450 00246, உதவி பங்கீட்டு அலுவலகம் (சரகம் -1) - 94450 00250, மேட்டுப்பாளையம் - 81482 52625, அன்னூா் - 99408 80903, சூலூா் - 94450 00406, பேரூா் - 94450 00249, மதுக்கரை - 94450 00248, கிணத்துக்கடவு - 97152 07270, பொள்ளாச்சி - 94450 00252, வால்பாறை - 94450 00577, ஆனைமலை - 94866 32933 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT