கோவை மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கம் உத்தரவை மீறியதாக கடந்த 45 நாள்களில் 19,608 போ் கைது செய்யப்பட்டு 16,561 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், விதிமீறி வாகனங்களில் செல்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவை மாநகரில் திங்கள்கிழமை மட்டும் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 போ் கைது செய்யப்பட்டு 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
புகா் பகுதிகளில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 82 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் மே 11 வரை மொத்தமாக 17,339 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,608 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், 16,561 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.