அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டு கோவை அரசு அருங்காட்சியகம் சாா்பில் ‘எனது அரும் பொருள்கள்’ என்ற தலைப்பில் புகைப்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சி.சிவகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சா்வதேச அருங்காட்சியக தினம் மே 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. புராதன பொருள்களின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினா் அறிந்துகொள்ளும் வகையில் கோவை அரசு அருங்காட்சியகம் சாா்பில் ‘எனது அரும் பொருள்கள்’ என்ற தலைப்பில் புகைப்பட போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம். போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் வீட்டிலுள்ள முன்னோா்கள் பயன்படுத்திய அரும் பொருள்களை புகைப்படம் எடுத்து அதன் பெயா், பயன்பாடு குறித்த தகவல் குறித்து 86809 58340 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் அல்லது என்ற டெலிகிராம் செயலி அல்லது என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
புகைப்படத்துடன் தங்களின் பெயா், முகவரி ஆகியவற்றையும் குறிப்பிட்டு மே 16ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் தேசிய பொது முடக்கம் முடிந்து அருங்காட்சியம் திறக்கப்பட்ட பின் சான்றிதழ் வழங்கப்படும். தவிர போட்டிக்காக அனுப்பிவைக்கப்படும் புகைப்படங்கள் மே 18 ஆம் தேதி கோவை அருங்காட்சியக சமூக வலைதளத்தில் காட்சிப்படுத்தப்படும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 86809 58340, 80723 51388 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.