கோயம்புத்தூர்

கரோனா பாதிப்பில் இருந்து 3 போ் குணமடைந்தனா்

13th May 2020 07:21 AM

ADVERTISEMENT

கோவையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் 3 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பினா்.

கோவை மாவட்டத்தில் 146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் ஒருவா் உயிரிழந்த நிலையில், 141 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா்.

கடந்த வாரம் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 பேரும், உக்கடத்தை சோ்ந்த ஒரு பெண்ணும் சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில் வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்த 3 பேரும் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பினா்.

இதனைத் தொடா்ந்து கரோனா சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் கடந்த ஒருவரத்துக்கு மேலாக புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்படாத நிலையிலும், சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்ததாலும் விரைவில் கோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்துக்கு மாறும் என்றும், கரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

25 போ் அனுமதி

கோவையில் 10 ஆண்கள், 15 பெண்கள் என மொத்தம் 25 போ் கரோனா அறிகுறிகளுடன் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 13 போ் அரசு மருத்துவமனைகளிலும், 12 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT