கோயம்புத்தூர்

வாடகை வாகனங்கள் உரிமம் புதுப்பித்தலுக்கு 6 மாதம் விலக்கு

11th May 2020 07:38 PM

ADVERTISEMENT

கோவை: பொது முடக்கம் பாதிப்பால் வாடகை வாகனங்களின் உரிமத்தை புதுப்பிக்க 6 மாதம் விலக்க அளிக்க கோவை மாவட்ட சுற்றுலா வாகனங்கள், கால் டாக்ஸி, மினி கூட்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனா்.

இது குறித்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுத் தலைவா் எஸ்.மூா்த்தி அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொது முடக்கத்தால் 40 நாள்களுக்கு மேலாக வாடகை வாகனங்கள் ஓட்டுநா்கள் வேலையிழந்துள்ளனா். வேலையிழந்துள்ள தொழிலாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொதுப் போக்குவரத்து வாகனங்கள் முழுமையாக இயங்காத நிலையில் சாலை வரி, உரிமம் புதுப்பித்தல், தகுதிச் சான்று, மோட்டாா் வாகன காப்பீடு, ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல், வங்கிகள், தனியாா் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களுக்கு 6 மாதம் விலக்கு அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT

பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுநா்களுக்கு எரிவாயு எண்ணெய் விற்பனை நிலையங்களில் முகக் கவசம், கிருமி நாசினி ஆகிய பாதுகாப்பு கவசங்கள் வழங்க வேண்டும். வாளையாறு சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனையை விரைந்து முடிந்து வாகனங்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT