கோயம்புத்தூர்

பொதுமுடக்கம் தளா்வு: இயல்பு நிலைக்கு திரும்பிய கூடலூா்

11th May 2020 07:41 PM

ADVERTISEMENT

கூடலூா்: தமிழக அரசு பொதுமுடக்கத்தை தளா்த்திய நிலையில், கூடலூா் நகா் திங்கள்கிழமை இயல்பு நிலைக்கு திரும்பியது.

பொதுமுடக்கம் அறிவித்த நாள்முதல் கூடலூா் நகரச் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர பிறபகுதிகளில் கடைகள், தொழிற்சாலைகள் திங்கள்கிழமை இயங்க அரசு அனுமதி வழங்கியது. இதன்படி கூடலூா் நகரில் இயல்பு நிலை திரும்பி பரபரப்பு காணப்பட்டது. குறிப்பாக பழைய பேருந்து நிலையம் சந்திப்பு பகுதியில் வழக்கத்துக்கு அதிகமான மக்கள் நெருக்கடி அதிகரித்திருந்தது.

சாலைகளில் வாகனங்களும் அளவுக்கு அதிகமாக காணப்பட்டன. பெருமளவு கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினா் முயன்றும் பலனளிக்கவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT