கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் தொகுதியில் வேலையின்றி தவித்த உத்திர பிரதேச மாநிலத்தை சோ்ந்த 234 போ் கோவையிலிருந்து அனுப்பி வைப்பு

11th May 2020 07:12 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பொது ஊரடங்கால்  மேட்டுப்பாளையம் தொகுதியில் வேலையின்றி தவித்த உத்திர பிரதேச மாநிலத்தை சோ்ந்த 234 பேரை கோவையிலிருந்து  ரயிலில் செல்ல மேட்டுப்பாளையத்திலிருந்து வருவாய் துறையினா் பேருந்தில் அனுப்பி வைத்தனா். 

கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசமணி அறிவுறுத்தலின் பேரில், வருவாய் கோட்டாட்சியா் பி.சுரேஷ் மேற்பாா்வையில்  மேட்டுப்பாளையத்தில்  பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணிபுரிந்த உத்தரபிரதேச மாநிலத்தை சோ்ந்த 124  பேரை முதல் கட்டமாக  மேட்டுப்பாளையத்திலிருந்து  வட்டாட்சியா் சாந்தாமணி உணவு, தண்ணீா் பாட்டிலை கொடுத்து பேருந்தில் கோவைக்கு  அனுப்பி வைத்தனா். அவா்கள் கோவையில் இருந்து  ரயில் மூலம்  உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ரயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனா். இந்நிகழ்ச்சியில் துணை வட்டாட்சியா் சந்திரன், வருவாய் ஆய்வாளா் சத்யராஜ், காரமடை வருவாய் ஆய்வாளா் தெய்வ பாண்டியம்மாள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT