கோயம்புத்தூர்

சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

11th May 2020 11:10 PM

ADVERTISEMENT

கோவை: கோவையில் சலூன் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கக் கோரி, கோவை மாவட்ட மருத்துவா், சவரத் தொழிலாளா் நலச் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.

இது குறித்து சங்கத்தின் தலைவா் என்.ராமகிருஷ்ணன், செயலா் எம்.சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாநகரில் சுமாா் 5 ஆயிரம் சலூன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். கரோனா பொது முடக்கம் காரணமாக சுமாா் ஒன்றரை மாதங்களாக நாங்கள் கடைகளை அடைத்திருக்கிறோம். இதனால் அத்தியாவசியச் செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றோம்.

பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு வரும் நிலையில் சவரத் தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நலவாழ்வை மனதில் கொண்டு சலூன் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தியிருப்பதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT