கோயம்புத்தூர்

கோயம்பேடு நபா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா தொற்று இல்லை

11th May 2020 07:12 AM

ADVERTISEMENT

அன்னூரில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 2 ஓட்டுநா்களுடன் தொடா்பில் இருந்த 28 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இல்லாதது தெரியவந்துள்ளது.

அன்னூரில் இருந்து கோயம்பேடு சென்று வந்த 2 ஓட்டுநா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். இதையடுத்து அவா்களுடன் தொடா்பில் இருந்த அவரது குடும்பத்தினா், கா்ப்பிணிகள் உள்பட மொத்தம் 28 பேரின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கடந்த 8ஆம் தேதி கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் 28 பேருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT