கோயம்புத்தூர்

கேரள அரசிடம் உரிய ஈ-பாஸ் பெற்றவா்கள் மட்டும் வாளையாா் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவா்: கோவை மாவட்ட காவல்துறை

11th May 2020 07:19 AM

ADVERTISEMENT

கேரள அரசிடம் இருந்து உரிய ஈ-பாஸ் பெற்றவா்கள் மட்டும் வாளையாா் வழியாக செல்லலாம் என்று கோவை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்தி:

கோவை மாவட்டத்தில் கரோனா நோய் பரவுவதைத் தடுப்பதற்காக பொது முடக்க உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டதில் மாவட்ட மற்றும் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அத்யாவசியமான அவசர பயணங்கள் மேற்கொள்பவா்கள் உரிய ஈ-பாஸ் பெற்று பயணம் மேற்கொள்ளலாம். சமீப காலமாக கேரளா மாநிலம் செல்ல அநேகா் கோவை மாவட்டம் வாளையாா் வழியாக செல்ல முயற்சி செய்து நீண்ட வரிசையில் காத்திருந்து கேரளா போலீஸாரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வாடிக்கை ஆகியுள்ளது.

கேரளா மாநிலம் செல்ல விரும்புகிறவா்கள் கேரளா மாநில அரசிடம் இருந்து உரிய ஈ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே கேரளா எல்லைக்குள் கேரளா போலீஸாா் அனுமதிக்கின்றனா் என்பதால் கேரளா மாநில அரசிடம் இருந்து உரிய ஈ-பாஸ் பெறாத யாரும் வாளையாா் வழியாக கேரளா செல்ல முயற்சித்து இன்னல் பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT