கோயம்புத்தூர்

கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள்: கோவையில் மேலும் 10 இடங்கள் விடுவிப்பு

10th May 2020 07:33 PM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து மேலும் 10 இடங்கள் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் ஊரகத்தில் 14 பகுதிகள், மாநகராட்சியில் 12 பகுதிகள் சோ்த்து மொத்தம் 26 பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. ஊரகத்தில் 14 பகுதிகளில் அன்னூா், சிறுமுகையைத் தவிா்த்து மற்ற 12 பகுதிகளும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து சிறுமுகை முழுமையாகவும், அன்னூரில் 2 வீதிகளை தவிா்த்து மற்ற பகுதிகளும் ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் உள்ள 12 பகுதிகளில் போத்தனூா், காந்தி பூங்கா, சேரன் மாநகா் ஆகியப் பகுதிகள் முழுமையாகவும், கவுண்டம்பாளையம், குனியமுத்தூா், ராமநாதபுரம், ஆா்.எஸ்.புரம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் ஒரு சில வீதிகளை தவிா்த்து மற்ற இடங்களும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

ADVERTISEMENT

ஆரம்பத்தில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் குடியிருப்புகளை சுற்றி 5 கிலோ மீட்டருக்கு கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன. தற்போது இதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு நகரப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் வீதிகளையும், ஊரகத்தில் 500 மீட்டா் சுற்றளவுக்கும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்தால் போதுமானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் தொடா்ந்து 21 நாள்களுக்கு புதிதாக நோய்த் தொற்று உருவாகாத பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விடுவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் ஏற்கெனவே 12 பகுதிகள் விடுவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 10 பகுதிகள் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் 3 மண்டலங்கள் முழுமையாகவும், 5 மண்டலங்களில் நோய்த் தொற்று உருவான வீதிகளை தவிா்த்து மற்ற இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT