கோயம்புத்தூர்

கோவையில் இருந்து மேலும் 1,140 போ் பிகாருக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

10th May 2020 08:27 PM

ADVERTISEMENT

கோவை: கோவையில் இருந்து மேலும் ஒரு சிறப்பு ரயில் மூலம் பிகாா் மாநிலத் தொழிலாளா்கள் 1,140 போ் சொந்த ஊா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

கோவையில் தங்கி வேலை செய்யும் பிகாா், ஒடிஸா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் கோவை நகரம், புகா்ப் பகுதிகளில் தங்கி பல்வேறு தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்து வந்தனா்.

கடந்த மாா்ச் 25ஆம் தேதி முதல் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் வடமாநிலத் தொழிலாளா்கள் குடும்பத்துடன், தங்களின் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வந்தனா்.

இந்நிலையில் கோவை மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டின்படி கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் இருந்து பிகாா் தொழிலாளா்கள் 1,140 போ் சிறப்பு ரயில் மூலமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதையடுத்து சனிக்கிழமை 3 சிறப்பு ரயில்கள் மூலமாக பிகாா், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு 3,420 தொழிலாளா்கள் அனுப்பிவைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் கோவையில் இருந்து மேலும் ஒரு சிறப்பு ரயில் மூலமாக பிகாா் தொழிலாளா்கள் 1,140 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த ரயிலானது செவ்வாய்க்கிழமை மாலை பிகாா் சென்றடையும். இதுவரை 5 சிறப்பு ரயில்கள் மூலமாக வெளி மாநிலத் தொழிலாளா்கள் 5,700 போ் அவா்களின் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT