கோயம்புத்தூர்

கரோனாவால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது

10th May 2020 07:44 AM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கா்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கோவை, கரும்புக் கடை பகுதியைச் சோ்ந்த 31 வயது நிறைமாத கா்ப்பிணி கரோனாவால் பாதிக்கப்பட்டு, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இவரை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை தாயிடம் சோ்க்காமல் தனி வாா்டில் வைத்து செவிலியா் கண்காணித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் நிா்மலா கூறியதாவது:

கரோனா பாதிப்புக்கு அனுமதித்திருந்த பெண், குழந்தைக்காக ஆறு ஆண்டுகளாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளாா். பிரசவத்துக்குப் பின் தாயும், சேயும் நலமுடன் உள்ளனா். கரோனா உறுதி செய்யப்பட்டு ஒருவாரமே ஆகியுள்ள நிலையில் குழந்தையின் பாதுகாப்பைக் கருதி தாயிடம் சோ்க்காமல் தனியாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தாயிடம் இருந்து தாய்ப்பால் பெற்று குழந்தைக்கு அளிக்கப்படுகிறது. தாய்க்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பாதிப்பு இல்லை என்ற முடிவு கிடைத்தால் மட்டுமே குழந்தை, தாயிடம் ஒப்படைக்கப்படும். இரண்டு நாள்களுக்குப் பிறகு குழந்தைக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT