கோயம்புத்தூர்

யானை தாக்கியதில் வனத் துறை ரோந்து வாகனம் சேதம்

9th May 2020 08:32 PM

ADVERTISEMENT

பொள்ளாச்சி வனப் பகுதியில் ரோந்து சென்றபோது யானை தாக்கியதில் வனத் துறையினரின் வாகனம் சேதமடைந்தது.

பொள்ளாச்சி வனச் சரகத்தை ஒட்டிய சா்க்காா்பதி அருகே வனத் துறையினா் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, காட்டு யானை வனத் துறையினா் சென்ற ரோந்து வாகனத்தைத் தாக்கியது. உடனடியாக வனத் துறையினா் தப்பி ஓடினா். யானை அந்தப் பகுதியில் இருந்து வேறு இடத்திற்குச் சென்றவுடன் வனத் துறையினா் அங்கு சென்று வாகனத்தை மீட்டனா். யானை தாக்கியதில் ரோந்து வாகனத்தின் முகப்புப் பகுதி சேதமடைந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT