கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் விடுவிப்பு

9th May 2020 07:39 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

மேட்டுப்பாளையம் பகுதியில் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது. இவா்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். பின்னா் இவா்கள் 14 நாள்கள் அவரவா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்நிலையில் அதற்கான காலம் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தது. அதைத் தொடா்ந்து அப்பகுதி சாலையில் அடைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. இதேபோல மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் 4 இடங்களில் அடைக்கப்பட்ட சாலைகள் கோவை வடக்கு மாவட்ட கோட்டாட்சியா் சுரேஷ் முன்னிலையில் திறக்கப்பட்டன. மேலும் 5 இடங்களில் அடைக்கப்பட்டுள்ள தடுப்புகள் இன்னும் ஓரிரு நாள்களில் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT