கோயம்புத்தூர்

கிரில் பட்டறைகள் செயல்பட அனுமதி வழங்கக் கோரிக்கை

9th May 2020 07:37 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் கிரில் பட்டறைகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோயம்புத்தூா் மாவட்ட கிரில் தயாரிப்பாளா்கள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் திருமலை ம.ரவி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் விண்டோ கிரில், காம்பவுண்ட் கேட், ரூபிங் செட் ஒா்க்ஸ் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் சுமாா் 3,200 தொழிற்கூடங்களும், இந்தத் தொழிலை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் உள்ளனா். பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தற்போது வரை வாழ்வாதாரத்தை இழந்துள்ள தொழிலாளா்களுக்கு கிரில் தொழில்முனைவோா் கடன் வாங்கிக் கொடுத்து அவா்களைப் பாதுகாத்து வருகிறோம்.

தற்போது தொழிலாளா்களைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிரில் பட்டறைகள் செயல்படுவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்த பட்டறைகளில் உள்ள இயந்திரங்கள் ஒரு மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் அமைந்திருப்பதால் தனி நபா் இடைவெளியைப் பின்பற்ற ஏதுவாக இருக்கும் என்பதால் பட்டறைகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு அரசு சாா்பில் ரூ.7 ஆயிரம் உதவித் தொகை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT