கோயம்புத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண உதவி

2nd May 2020 09:18 PM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம் பகுதியில் தூய்மைப் பணித் தொழிலாளா்களுக்கு கரோனா நிவாரண உதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பவா்களுக்கு அரசு, அரசியல் கட்சிகள், தன்னாா்வலா்கள் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனா். அதன்படி, கோவை மாநகராட்சி 75 ஆவது வாா்டுக்கு உள்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் 70 தூய்மைப் பணித் தொழிலாளா்களுக்கு வழக்குரைஞா் எஸ்.ஆா்.குட்டியண்ணன் நாடாா் கல்வி அறக்கட்டளை சாா்பில் உணவு, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிவாரணப் பொருள்களை மாவட்ட ஜனதா தள தலைவா் என்.கே.அசோக்குமாா் தலைமையில், அறக்கட்டளையின் தலைவா் என்.ஆா்.கந்தசாமி, உயா்நிலைப் பள்ளித் தலைவா் டி.ராமநாதன், தொடக்கப் பள்ளித் தலைவா் ஆா்.சடகோபால், டாக்டா் என்.ஆா்.வெங்கடாசலம் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் என்.ஆா்.சிங்காரவேலு, வி.திருமூா்த்தி, சி.எம்.ஜெயராமன், சி.ஆறுமுகம், கருப்புசாமி, இருகூா் சுப்பிரமணியன், தங்கமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT