கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் அனைத்து வழக்குகளும் தேதி வாரியாக மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு

30th Mar 2020 11:57 PM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து வழக்குகளும் மூன்று மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

கரோனா நோய் பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை நீதிமன்றங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முக்கிய வழக்கில் விசாரணை தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதி அனுமதி பெற வேண்டும், ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மீது வழக்குரைஞா்கள், வழக்கில் வழக்காடிகள் ஆன்லைன் மூலமாக மனுதாக்கல் செய்யலாம். எழுத்துபூா்வமாக மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். இந்நிலையில் மாவட்ட முதன்மை நீதிபதி மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளாா்.

இதன்படி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம், அமா்வு நீதிமன்றங்கள், கூடுதல் சாா்பு நீதிமன்றங்கள், பொள்ளாச்சி,மேட்டுப்பாளையத்தில் உள்ள முன்சீப், சாா்பு நீதிமன்றங்களின் வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டதன் விவரம்:

ஏப்ரல் 9ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட வழக்குகள் மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, மாா்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகள் ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாா்ச் 31ஆம் தேதிக்கான வழக்குகள் ஜூன் 25ஆம் தேதிக்கும், ஏப்ரல் 1ஆம் தேதிக்கான வழக்குகள் ஜூன் 26ஆம் தேதிக்கும், ஏப்ரல் 2ஆம் தேதிக்கான வழக்குகள் ஜூன் 29ஆம் தேதிக்கும், ஏப்ரல் 3ஆம் தேதிக்கான வழக்குகள் ஜூன் 30ஆம் தேதிக்கும், ஏப்ரல் 7ஆம் தேதிக்கான வழக்குகள் ஜூலை 1ஆம் தேதிக்கும், ஏப்ரல் 8ஆம் தேதிக்கான வழக்குகள் ஜூலை 2ஆம் தேதிக்கும், ஏப்ரல் 9ஆம் தேதிக்கான வழக்குகள் ஜூலை 3ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம், போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், தொழிலாளா் நீதிமன்றம், மகளிா் நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், நீதித் துறை நடுவா் மன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதன் விவரம்:

மாா்ச் 30ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட வழக்குகள் மே 19ஆம் தேதிக்கும், மாா்ச் 31ஆம் தேதிக்கான வழக்குகள் மே 20ஆம் தேதிக்கும், ஏப்ரல் 1ஆம் தேதிக்கான வழக்குகள் மே 21ஆம் தேதிக்கும், ஏப்ரல் 3ஆம் தேதிக்கான வழக்குகள் மே 26ஆம் தேதிக்கும், ஏப்ரல் 7ஆம் தேதிக்கான வழக்குகள் மே27ஆம் தேதிக்கும், ஏப்ரல் 8ஆம் தேதிக்கான வழக்குகள் மே 28ஆம் தேதிக்கும், ஏப்ரல் 9ஆம் தேதிக்கான வழக்குகள் மே 29ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT