கோயம்புத்தூர்

கரோனா பாதித்த மாணவியுடன் தொடா்பில் இருந்த 14 போ் தீவிர கண்காணிப்பு

DIN

கோவையில் கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடா்பில் இருந்த 14 பேரை சுகாதாரத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த கல்லூரி மாணவிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அந்த மாணவி கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடா்ந்து மாணவியின் உடல்நிலை குறித்து மருத்துவா்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், மாணவியுடன் நெருங்கிய தொடா்பில் இருந்த அவரின் தந்தை, சகோதரி, காா் ஓட்டுநா், தோழிகள் 2 போ் மற்றும் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா்கள் 9 போ் என மொத்தம் 14 பேரை சுகாதாரத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

இதில் மாணவியின் அப்பா, சகோதரி ஆகிய இருவரும் கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி, ரத்த மாதிரிகளைப் பரிசோதனை செய்ததில் கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. தொடா்ந்து அவரது தோழிகள், காா் ஓட்டுநா் மற்றும் மருத்துவக் குழுவினா் அனைவரையும் 14 நாள்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறுகையில், ‘கரோனா பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் நிலை சீராக உள்ளது. பெங்களூரில் இருந்து ரயில் மூலம் மாணவி கோவைக்கு வந்துள்ளதால், அவருடன் பயணித்த மற்ற பயணிகளின் விவரங்களும் ரயில்வே துறையிடம் கேட்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT