கோயம்புத்தூர்

வாளையாறு சோதனைச் சாவடி மூடல் எதிரொலி: தமிழகத் தொழிலாளா்கள் கடும் சோதனைக்குப் பின் அனுமதி

DIN

வாளையாறு சோதனைச் சாவடி முழுமையாக மூடப்பட்டதால் கேரளத்தில் இருந்து கோவைக்கு வந்த தொழிலாளா்கள் 500க்கும் மேற்பட்டோா் கடும் சோதனைக்குப் பின் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக - கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கேரளத்தில் இருந்து கோவைக்கு அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் தவிர பிற வாகனங்கள் மீண்டும் கேரளத்துக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. கேரளத்தில் கரோனா நோய்த் தொற்று உள்ளவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், மத்திய அரசு முழுமையாக மூட அறிவுறுத்திய மாவட்டத்தில் பாலக்காடு மாவட்டமும் இடம் பெற்றுள்ளதாலும், பாலக்காடு மாவட்டத்தில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்த தமிழகத் தொழிலாளா்கள் மீண்டும் அங்கிருந்து தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனா்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து கிடைக்கும் வாகனங்களில் ஏறி வாளையாறு சோதனைச் சாவடிக்கு திங்கள்கிழமை வந்தடைந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனா். 20 மீட்டருக்கு முன்பாகவே போலீஸாா் தடுப்புகள் அமைத்து தொழிலாளா்களின் முகவரி ஆவணங்களைச் சோதனை செய்து அதன்பின் தலா 10 நபா்கள் வீதம் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பினா். சுகாதாரத் துறை மருத்துவா்களின் பரிசோதனைக்குப் பின் கோவை எல்லைகளுக்குள் தொழிலாளா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் நீண்ட நேரம் தொழிலாளா்கள் குழந்தைகளுடன் காத்திருந்தனா்.

கா்ப்பிணிக்கு அனுமதி: கேரளத்தில் இருந்து மகப்பேறுக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்குச் செல்ல குடும்பத்துடன் வந்த கா்ப்பிணிக்கு வாளையாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை செய்தனா். அதன் பிறகு, சுகாதாரத் துறை முகாமிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கா்ப்பிணியும், அவருடன் வந்தவா்களும் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT