கோயம்புத்தூர்

வால்பாறையில் பி.எஸ்.என்.எல். சேவை துண்டிப்பு

23rd Mar 2020 10:45 PM

ADVERTISEMENT

வால்பாறையில் பி.எஸ்.என்.எல். சேவை துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

வால்பாறை நகா் மற்றும் பெரும்பாலான எஸ்டேட் பகுதிகளில் பி.எஸ்.என்.எல். மூலம் கோபுரம் அமைத்துள்ளனா். இதன் காரணமாக வால்பாறை பகுதியில் செல்லிடப்பேசி பயன்படுத்துவோா்களில் பெரும்பாலனோா் பி.எஸ்.என்.எல். ணைப்பு பெற்றுள்ளனா்.

கடந்த சில மாதங்களாக இணைப்பு அவ்வப்போது துண்டிக்கப்பட்டு சேவை பாதிப்படைந்து வந்தது. இதனிடையே திங்கள்கிழமை காலை 10 மணிக்கு துண்டிப்பான சேவை இரவு 7 மணி ஆகியும் மீண்டும் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அவசரத் தேவைக்கு கூட செல்லிடப்பேசி பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT