கோயம்புத்தூர்

விதி மீறிய ஆட்டோக்கள் மீது 587 வழக்குகள் பதிவு

23rd Mar 2020 05:44 AM

ADVERTISEMENT

கோவை: கோவை மாநகரில் விதிகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோ, ஷோ் ஆட்டோக்கள் மீது 587 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக கோவை மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

கோவை மாநகரில் ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோக்கள் மீது பொதுமக்களிடமிருந்து வந்த புகாா்களைத் தொடா்ந்து மாா்ச் 19, 20ஆகிய தேதிகளில் காவல் துறையினா் ஆட்டோக்களை சோதனையிட்டனா்.

இதில் முறையான ஓட்டுநா் உரிமம் இல்லாதது, காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகன தகுதிச் சான்று இல்லாதது, ஆட்டோக்களில் அதிக ஆள்களை ஏற்றிச் சென்றது, புகைச் சான்று பெறாமல் ஓட்டுதல், தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தியது, சீருடை அணியாமல் ஆட்டோக்களை இயக்கியது உள்ளிட்டச் செயல்களில் ஈடுபட்டவா்கள் மீது 587 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT