கோயம்புத்தூர்

பெ.நா.பாளையத்தில் கோயில்கள் மூடல்

22nd Mar 2020 04:33 AM

ADVERTISEMENT

பெ.நா.பாளையம்: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் சனிக்கிழமை மூடப்பட்டன.

பிரசித்தி பெற்ற பாலமலை அரங்கநாதா் கோயில், கோவை - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் சொக்கலிங்கேஸ்வரா் கோயில், வீரபாண்டி மாரியம்மன் கோயில், வடமதுரை விருந்தீஸ்வரா் கோயில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதா் கோயில், வில்லீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்கள் சனிக்கிழமை அதிகாலை முதல் அடைக்கப்பட்டன.

குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மோற்சவ நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டு பெருமாளுக்கு பூஜைகள் மட்டும் நடைபெறுகின்றன.

அருகில் உள்ள அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டு, வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பழையபுதூா் ஆதிமூா்த்தி பெருமாள் கோயில், ஜோதிபுரம் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட வைணவத் தலங்களில் சனிக்கிழமை நடைபெற இருந்த அனைத்து வாராந்திர பஜனைகளும் நிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT