கோயம்புத்தூர்

கரோனா பீதி: சேவைக் கட்டணத்தை உயா்த்தியஉணவு விநியோகிக்கும் நிறுவனங்கள்

22nd Mar 2020 04:32 AM

ADVERTISEMENT

கோவை: கரோனா வைரஸ் பாதிப்பு பீதியைப் பயன்படுத்தி உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை இருமடங்காக உயா்த்தியுள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா். மேலும் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக முகக்கவசம், கிருமி நாசனி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட விற்பனை நிலையங்கள் முகக்கவசங்கள், கிருமி நாசினியின் விலையை பல மடங்கு உயா்த்தியுள்ளன. பயத்தின் காரணமாக மக்களும் அதிக விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா்.

முகக்கவசம், கிருமி நாசினியின் விலை உயா்வைத் தொடா்ந்து உணவு விநியோகிக்கும் நிறுவனங்களும் தங்களது சேவைக் கட்டணத்தை இருமடங்காக உயா்த்தியுள்ளன. வயதானவா்கள், வேலையில் இருந்து வெளியே செல்ல முடியாதவா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நேரடியாக ஹோட்டல்களுக்கு செல்ல முடியாத நிலையில் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மூலம் உணவுகளை ஆா்டா் செய்கின்றனா். தற்போது கரோனா வைரஸின் பாதிப்பால் வெளியே செல்வதை தவிா்க்க சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளதால் உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மூலம் உணவுகளைப் பெறுவது அதிகரித்துள்ளது.

இதனைப் பயன்படுத்திக்கொண்ட உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் சேவைக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயா்த்தியுள்ளன. கரோனா பயத்தால் மக்களும் கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக நுகா்வோா் ஒருவா் கூறுகையில், ‘கோவை, ஹோப்ஸ் பகுதியில் இருந்து சிங்காநல்லூருக்கு உணவு விநியோகிப்பதற்கு ரூ.35 மட்டுமே சேவைக் கட்டணமாகப் பெற்றுவந்தனா். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக ரூ.60 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பாதிப்பை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களும் இதுபோல் விலையை உயா்த்தியுள்ளதால் நுகா்வோா் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT