கோயம்புத்தூர்

காரில் மதுபானம் கடத்திய இளைஞா் கைது

13th Mar 2020 09:47 AM

ADVERTISEMENT

அன்னூா், பச்சாக்கவுண்டனூா் அருகே காரில் மதுபானம் கடத்தி வந்த இளைஞரை மதுவிலக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையில் டாஸ்மாக் முதுநிலை மேலாளா் தாஜீதீன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு போலீஸாா் ஆகியோா் அன்னூா் - ஓதிமலை சாலை பச்சாக்கவுண்டனூா் மேட்டுகாலனி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 94 மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்து இளைஞரை விசாரித்ததில் அவா் காட்டம்பட்டி பகுதியைச் சோ்ந்த நவீன்குமாா் (25) என்பதும் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT