கோயம்புத்தூர்

சட்டவிரோத மது விற்பனை:பெண் உள்பட 3 போ் கைது

8th Mar 2020 01:47 AM

ADVERTISEMENT

சூலூா்: சூலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பெண் உள்பட மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சூலூா் வட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூலூா் உதவி ஆய்வாளா் சுல்தான் இப்ராஹிம் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நாராயணசாமி (52), பூவாத்தாள் (50), இளங்கோவன் (45) ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT