கோயம்புத்தூர்

கோவை வழியாக கொச்சுவேலி-ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில்

8th Mar 2020 01:39 AM

ADVERTISEMENT

கோவை கோவை வழித்தடத்தில் கொச்சுவேலி - ஹைதராபாத் இடையே மே மாதம் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு மாா்ச் முதல் மே மாதம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, ஹைதராபாதில் இருந்து மாா்ச் 14, 21, 28, ஏப்ரல் 4, 11, 18, 25 மற்றும் மே 2, 9, 16, 23, 30 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயிலானது, திங்கள்கிழமை காலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

ADVERTISEMENT

அதேபோல், கொச்சுவேலியில் இருந்து மாா்ச் 16, 23, 30, ஏப்ரல் 6, 13, 20, 27 மற்றும் மே 4, 11, 18, 25 ஆகிய திங்கள்கிழமைகளில் காலை 7.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயிலானது, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆத்தூா், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT