கோயம்புத்தூர்

குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற ‘யுகம்’ 2020 நிறைவு

8th Mar 2020 01:36 AM

ADVERTISEMENT

கோவை: கோவை குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்று வந்த 8ஆம் ஆண்டு யுகம் நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 7) நிறைவடைந்தது.

சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனத்தில் ஆண்டுதோறும் தென்னிந்திய அளவிலான கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான யுகம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 8 ஆம் ஆண்டு யுகம் நிகழ்ச்சி பிப்ரவரி 29ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை வரை நடைபெற்றது.

இதில் தென்னிந்தியாவைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா். இதில், டெக் கான்க்ளேவ், இன்ஸ்பயா் இந்தியா, யூத் கான்க்ளேவ் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

குமரகுரு நிறுவனங்களின் தொழில்நுட்பக் களமான ‘ரே’, ‘ஐ கியுப்’, ‘கேரேஜ்’ ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் திட்டத்தை 48 மணி நேர ஹேக்கத்தான், காகித விளக்கக் காட்சி, குறியீட்டுப் போட்டிகளின் மூலம் உருவாக்குவதை மையமாகக் கொண்ட டெக் கான்க்ளேவில் கோவை, காருண்யா பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து ஆளுமைகளின் அனுபவங்களைப் பகிா்கின்ற நிகழ்வான ‘இன்ஸ்பெயா் இந்தியா யூத் கான்’ நிகழ்வில் 30க்கும் மேற்பட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிா்ந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளைஞா்களை ராணுவ சேவையில் பங்களிக்க ஊக்குவிப்பதை அடிப்படையாகக் கொண்டு தேசிய மாணவா் படையினா் சாா்பில் பாதுகாப்பு, ஆயுத கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற்றது.

குமரகுரு பிசினஸ் ஸ்கூல் மாணவா்களின் வா்த்தகக் கண்காட்சியான அங்காடி, சுமாா் 80க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் நடைபெற்றது. அதேபோல், களம் என்ற பெயரில் மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதைத் தவிர திரைப்பட பின்னணிப் பாடகா்கள், இந்திய, மேற்கத்திய கலாசார அடிப்படையிலான நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. யுகம் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சுமாா் ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசுத் தொகை வழங்கப்பட்டதாக குமரகுரு கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT