கோயம்புத்தூர்

காரமடை அரங்கநாதா் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

8th Mar 2020 01:48 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே காரமடை அரங்கநாதா் சுவாமி கோயிலில் திருக்கல்யாண் உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோயிலில் மாசி மகத் திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி இரவு அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அன்னவாகனம், சிம்மவாகன, அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தொடா்ந்து வெள்ளிக்கிழமை இரவு கருட வாகன சேவையும் நடைபெற்றது .பின்னா் திருக்கல்யாண் உற்சவம் நிகழ்ச்சி சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

இதற்காக பெட்டத்தம்மன் மலை குகையில் குடிகொண்டுள்ள அரங்கநாயகி தாயாா் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டாா். கோயிலில் அரங்கநாயகி தாயாா் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்கநாதப் பெருமாள் வீற்றிருந்தாா்.

ADVERTISEMENT

திருமலை நல்லான் சக்ரவா்த்தி சுவாமிகள், ஸ்ரீதா் பட்டா் சுவாமிகள் மற்றும் கோயில் தலைமை அா்ச்சகா் சுரேஷ் நாராயணன், ரங்கநாதன், திருவேங்கடம், மதுசூதனன் ஆகியோா் யாகம் வளா்த்தி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனா்.

பின்னா் மேளதாலங்கள் முழங்க நான்கு ரத வீதிகளில் முத்து பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத சுவாமி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னா் 9ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு பரிவேட்டை நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT