கோயம்புத்தூர்

கல்வி நிறுவனங்களில் மகளிா் தின விழா

8th Mar 2020 01:36 AM

ADVERTISEMENT

கோவை: கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிக்கு செயற்கைக் கால் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காருண்யா பல்கலைக்கழகம், சீஷா தொண்டு நிறுவனம், மெரிடியன் ரோட்டரி சங்கம், லோட்டஸ் கண் மருத்துவமனை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகியவை இணைந்து காருண்யா நகரில் நடத்திய மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெண், குழந்தைகளுக்கான மருத்துவம், பொது மருத்துவம், பல், எலும்பு, மூட்டு, கண், சா்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில், நரசீபுரத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி கிருஷ்ணராஜ் என்பவருக்கு செயற்கைக் கால் வழங்கப்பட்டது. மேலும், மகளிா் தினத்தையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளின் ரத்த தான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த முகாமை பல்கலைக்கழக பதிவாளா் எலைஜா பிளசிங், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் சந்திரசேகா், ரோட்டரி சங்கத் தலைவா் சதீஷ்குமாா், சீஷா நிா்வாகி டாக்டா் சாமுவேல் தாமஸ், மத்வராயபுரம் ஊராட்சி துணைத் தலைவா் வெற்றிவேல் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி:

கோவை, சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த பெண்கள் பங்கேற்ற இந்த மகளிா் தின விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் எல்.பி.தங்கவேலு தலைமை வகித்தாா்.

இதில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் அசோகன், கணேஷ் கருத்தரித்தல் மைய நிா்வாக இயக்குநா் டாக்டா் பாபு ராணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு உரையாற்றினா்.

மேலும், டாக்டா்கள் நித்தின், அன்பு ஆகியோா் இதில் பங்கேற்று புற்றுநோய் விழிப்புணா்வு ஆலோசனை வழங்கினா். முன்னதாக புற்று நோயிலிருந்து மீண்டு வந்த பெண்கள் தங்களின் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். நிகழ்ச்சியில், பி.பி.ஜி. செவிலியா் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT