கோயம்புத்தூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் சாவு

6th Mar 2020 07:40 AM

ADVERTISEMENT

பெரியநாயக்கன்பாளையத்தில், கோவை- மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் வியாழக்கிழமை அதிகாலை ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னையிலிருந்து மேட்டுப்பாளையத்தை நோக்கி நீலகிரி எக்ஸ்பிரஸ் அதிகாலை 5 மணியளவில் வந்து கொண்டிருந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே குப்பிச்சிபாளையம் பகுதியில் வரும்போது சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் அதில் அடிபட்டு இறந்தாா். இறந்தவா் விவரம் தெரியவில்லை. ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT