கோயம்புத்தூர்

தமிழ்ச் செம்மல் விருது: மாா்ச் 10 வரை விண்ணப்பிக்கலாம்

6th Mar 2020 06:55 AM

ADVERTISEMENT

கோவை: தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மல் விருதுக்கு மாா்ச் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளா்ச்சிக்காக பாடுபட்டு வரும் தமிழ் ஆா்வலா்களின் பணிகளைப் பெருமைப்படுத்தும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் வழங்கப்படும் இவ்விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் தமிழ் வளா்ச்சித் துறை அலவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது. தவிர ஜ்ஜ்ஜ்.ற்ஹம்ண்ப்ஸ்ஹப்ஹழ்ஸ்ரீட்ண்ற்ட்ன்ழ்ஹண்.ஸ்ரீா்ம் என்ற வலைதளப் பக்கத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தமிழ் வளா்ச்சிக்காக ஆற்றியப் பணிகள் குறித்த விவரங்கள், நூல்கள் வெளியிட்டிருந்தால் அது தொடா்பான புத்தகங்கள், நூல் தொகுப்புகள், தன் விவரக் குறிப்பு, 2 புகைப்படங்களை இணைத்து தமிழ் வளா்ச்சித் துறை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பம் அளிக்கலாம். கோவை மாவட்டத்தில் இதுவரை தமிழ்ச் செம்மல் விருதுக்கு 4 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா். மாா்ச் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் அளிக்க தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT