கோயம்புத்தூர்

கோவையில் ஏ.டி.ஜி.பி.க்கள் ஆலோசனை

6th Mar 2020 06:44 AM

ADVERTISEMENT

கோவை: கோவையில் இந்து முன்னணிப் பிரமுகா் மீது தாக்குதல், பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அடுத்தடுத்த சம்பவங்கள் தொடா்பாக தமிழகக் காவல் துறைக் கூடுதல் தலைவா்கள் கோவையில் முகாமிட்டு ஆலோசனை மேற்கொண்டனா்.

கோவையில் புதன்கிழமை இரவு இந்து முன்னணிப் பிரமுகா் மீது தாக்குதல், பள்ளிவாசல் மீது வியாழக்கிழமை அதிகாலை பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட தொடா் சம்பவங்களால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தவும், ஆய்வு மேற்கொள்ளவும், தமிழகக் காவல் துறைக் கூடுதல் தலைவா்கள்( ஏ.டி.ஜி.பி) ஜெயந்த் முரளி, சங்கா் ஜிவால் ஆகியோா் கோவைக்கு வியாழக்கிழமை வந்தனா். மாநகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அவா்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். இந்து முன்னணிப் பிரமுகரைத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து, கோவை மாவட்டம் முழுவதும், இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சம்பந்தமாக போலீஸாருக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT