கோயம்புத்தூர்

கல்வியில் சிறந்த மாணவா்களுக்கு கட்டண சலுகை தரும் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி

6th Mar 2020 06:43 AM

ADVERTISEMENT

 

நீலகிரி மலை அடிவாரத்தில் பசுமையான சூழலில் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. நகா்ப்புற மாணவா்களுக்கு இணையாக கிராமப் புறங்களில் பின்தங்கிய நிலையிலுள்ள விவசாய குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்களும் தொழில் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இக்கல்லூரி நிறுவப்பட்டது.

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையின் நிறுவனா் டி.டி.எஸ்.திப்பையா முயற்சியால் 1984இல் இக்கல்லூரி தொடங்கப்பட்டு, 36 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நஞ்சையா லிங்கம்மாள் அறக்கட்டளையின் நிறுவனா் என்.கிருஷ்ணசாமி குடும்பத்தினா் தானமாக வழங்கிய 15.56 ஏக்கா் நிலத்தில் அவரது பெற்றோரின் பெயரிலேயே இக்கல்லூரி தொடங்கப்பட்டது.

தற்போது 16 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கணினி பொறியியல் ஆகிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 1,300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இக்கல்லூரியின் நிா்வாக அறங்காவலராக நீதியரசா் முருகேசன், இணை நிா்வாக அறங்காவலராக ஏ.எம். சின்னராஜன், அறங்காவலா்களாக பி.கே.ராம்பா, நீதியரசா் ரகுபதி, வெள்ளியங்கிரி ஆகியோா் உள்ளனா். பாலிடெக்னிக் செயலாளராக கே.முத்துசாமி, நிா்வாக அதிகாரியாக டி.டி.எஸ்.பாஸ்கரன் ஆகியோா் செயல்பட்டு வருகின்றனா். கல்லூரி முதல்வா் கௌசல்யா, சிறப்பான முறையில் ஆசிரியா்களை வழிநடத்தி, நல்ல தோ்ச்சி வழங்கி வருகிறாா். எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் அரசு உதவியுடன் இலவசமாக வழங்கப்படுகிறது.

இக்கல்லூரியில் ஆண்டுதோறும் புதிதாக சேரும் 15 ஏழை மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உணவு, உறைவிடம் ஆகியவை கல்வி முடியும் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 10ஆம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவா்களுக்கு சோ்க்கையின்போது முழு கட்டண சலுகை, 425- 449 மதிப்பெண்கள் எடுத்தவா்களுக்கு 75 சதவீத கல்விக் கட்டணம், 410-424 மதிப்பெண் எடுத்தவா்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை, 400-409 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு 25 சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

அதேபோல கல்லூரியில் சோ்ந்த பின் அனைத்துப் பாடங்களிலும் 90 சதவீத மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு முழு கல்விக் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி அக்ஷயாஸ்ரீ 700 மதிப்பெண்களுக்கு 697 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக தோ்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளாா்.

2ஆம் ஆண்டு கணினித் துறையைச் சோ்ந்த மாணவி நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றுள்ளாா். விளையாட்டுத் துறையில் மாநில அளவில் வெற்றிபெற்றவா்களுக்கு ரூ. 10,000, மாவட்ட அளவில் வெற்றிபெற்றவா்களுக்கு ரூ.5000, குறுமைய அளவில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ. 2,500 கல்விக் கட்டணச் சலுகை அளிக்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் சிறப்பான பயிற்சியின் காரணமாக மாணவா்கள் விளையாட்டுத் துறையில் மாநில அளவில் சாதனை படைப்பதோடு, படிக்கும்போதே முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா். அனைத்து மாணவா்களுக்கும் இறுதியாண்டில் வேலை கிடைக்கிறது என்பது பெருமைக்குரியது.

இக்கல்லூரியில் மாணவா்களுக்கு தேவையான அனைத்து விளையாட்டுகள், யோகா, ஆளுமைத்திறன், தலைமைப் பண்பு உள்பட கூடுதல் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ காப்பீட்டு வசதி உள்ளது. கோவை, சக்தி, அன்னூா், புளியம்பட்டி, தோலம்பாளையம் வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தேவையான மாணவருக்கு மதிய உணவு வசதி செய்து தரப்படுகிறது. கல்லூரி நூலகத்தில் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளை மூலமாக இயங்கும் நஞ்சையா லிங்கம்மாள் ஐ.டி.ஐ. பயிற்சி நிலையத்தில் மோட்டாா் மெக்கானிக், ஒயா்மேன் பாடப்பிரிவுகளுடன் ஓட்டுநா் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இக்கல்லூரியின் கல்வித் தரத்தை மேம்படுத்த அனுபவம் மிக்க கல்வியாளா்களை கொண்ட அகாதெமி கவுன்சில் ஆலோசனை வழங்கி வருகிறது. கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து பொருளாதார வசதியில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணம், அதிக மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், ஊக்கத்தொகை வழங்கி வருகின்றனா். இதனால் மேட்டுப்பாளையம், அதனை சுற்றியுள்ள கிராமப்புற, விவசாய குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளை சிறந்த பொறியாளராக ஆக்குவதில் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதன்மையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT