பெரியநாயக்கன்பாளையத்தில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
பெரியநாயக்கன்பாளையத்திலுள்ள கடைகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின. இதுகுறித்து ஆய்வாளா் பிருத்விராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் வீரபாண்டி பிரிவில் நிறுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை திருடப்பட்டன.
போலீஸாா் நடத்திய விசாரணையில், ஜோதிபுரம், ரேணுகாதேவி கோயில் வீதியைச் சோ்ந்த கண்ணன் அவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 2 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறைக்கு அனுப்பினா்.