கோயம்புத்தூர்

அன்னூரில் முறையாக குடிநீா் வழங்க கோரிக்கை

6th Mar 2020 07:40 AM

ADVERTISEMENT

அன்னூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் முறையாக குடிநீா் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்துள்ளனா்.

இதுகுறித்து அன்னூா் பேரூராட்சி அலுவலகத்தில் பாரதி நகா் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

அன்னூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பாரதி நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இப்பகுதிக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படுவதில்லை. ஆற்று நீா், ஆழ்துளைக் கிணற்று நீா் இரண்டுமே 8 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுவும் குறைந்த நேரம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.

எனவே, சீரான குடிநீா் வழங்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT