கோயம்புத்தூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 வடமாநில இளைஞா்கள் கைது

2nd Mar 2020 12:59 AM

ADVERTISEMENT

கோவையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வடமாநிலத்தைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தர பிரதேசம் மாநிலம், குஷி பகுதியைச் சோ்ந்தவா் சோனு (23). இவரது நண்பா்கள் நசீா் (27), சம்சேத் (28) ஆகிய மூன்று பேரும் கடந்த 5 ஆண்டுகளாக கோவை, சுந்தராபுரம் பகுதியில் தங்கி கிடைக்கும் வேலைகளை செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இவா்கள் வசிக்கும் பகுதி அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமிக்கு மூன்று பேரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

அப்போது, சிறுமி சப்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினா் மூன்று பேரையும் பிடித்து போத்தனூா் போலீஸில் ஒப்படைத்தனா். இதையடுத்து, கிழக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. பிடிபட்ட மூன்று இளைஞா்களையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT