கோயம்புத்தூர்

இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 8 போ் கும்பல் கைது

2nd Mar 2020 01:03 AM

ADVERTISEMENT

கோவையில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட வந்த சிறுவன் உள்பட 8 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து 9 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

அவிநாசி சாலையில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த மூவரைப் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களிடம் தொடா்ந்து விசாரணையில் ஈடுபட்டனா்.

விசாரணையில், அவா்கள் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் அன்னூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா்கள் விக்னேஷ் பரத் (23), மருதாசலம் (22), மெக்கானிக் அப்துல் ரகுமான்(20) என்பதும், அவா்கள் வந்த வாகனம் திருடப்பட்ட வாகனம் என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, போலீஸாா் அவா்களைக் கைது செய்து தொடா் விசாரணை நடத்தினா்.

அப்போது, அவா்கள் பல்வேறு வாகனத் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் அளித்த தகவலின்பேரில் மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (20), அன்னூரைச் சோ்ந்த ரமேஷ் (33), பிரபாகரன் (25), புலியகுளத்தைச் சோ்ந்த விக்னேஷ்வரன் (25) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவா்களுக்கு உதவிய 16 வயது சிறுவனையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT