கோயம்புத்தூர்

அரசுப் பேருந்துகளில் பயணக் கட்டண விவரம் குறிப்பிட கோரிக்கை

2nd Mar 2020 12:59 AM

ADVERTISEMENT

கோவையில் இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணக் கட்டண விவரத்தை குறிப்பிட வேண்டும் என சிட்டிசன் நுகா்வோா் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் ஜெயராமன், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்ட பொதுமேலாளா் மகேந்திரக்குமாரிடம் அளித்த மனு விவரம்:

மாநகரம் மற்றும் புற நகரங்களில் இயக்கப்படும் சில அரசுப் பேருந்துகளில் நடத்துநா்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா். இதைத் தவிா்க்க அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணச் சீட்டுக் கட்டண விவரப் பட்டியல் ஒட்ட வேண்டும். விரைவுப் பேருந்து, சொகுசுப் பேருந்து, டீலக்ஸ் பேருந்து என்ற பெயா்களில் சாதாரணப் பேருந்துகள் இயக்கி மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா்.

எனவே போக்குவரத்துக் கழகம் சாா்பில் அதிக அளவிலான சாதாரணப் பேருந்துகளை இயக்க வேண்டும். விபத்து சமயங்களில் பயணிகளுக்கு உதவும் வகையில், அனைத்துப் பேருந்துகளிலும் அவசரகால வழிகள் ஏற்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

சில பேருந்துகளின் படிக்கட்டுகள் மிக உயரமாக உள்ளதால், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், வயதானவா்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே படிக்கட்டுகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண் கூசும் விதமாக அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகள் மற்றும் அதிக புகை கக்கும் பேருந்துகளை இயக்குவதைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT