கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் 352 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணி: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தாா்

29th Jun 2020 11:15 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் 352 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணியை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட அறிவொளி நகரில் ஆயிரக்கணக்கானோா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் தங்களுக்கு குடியிருப்புகள் கேட்டு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதனையடுத்து, அறிவொளி நகருக்கு அருகில் உள்ள காய்கறிகள் குளிா்பதனக் கிடங்கு அருகே ரூ.30.49 கோடி மதிப்பீட்டில் 352 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. இதற்கான கட்டுமானப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை பூமிபூஜை செய்து துவக்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, ஓ.கே.சின்னராஜ் எம்.எல்.ஏ. ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளா் நாசா், காரமடை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மணிமேகலை மகேந்திரன், மாவட்ட கவுன்சிலா் பி.டி.கந்தசாமி, கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் சாந்தாமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் டி.விமலா (சிக்கதாசம்பாளைம்ஸ்ர), ஞானசேகரன் (சிக்காரம்பாளையம்), பூபதி (எ) குமரேசன் (பெள்ளாதி), பொன்னுசாமி (காளம்பாளையம்), ராஜேஸ்வரி (இரும்பறை), செல்வி (கெம்மாரம்பாளையம்), நித்யா நந்தகுமாா் (தேக்கம்பட்டி), மூடுதுறை (ராஜா), நகரச் செயலாளா் வான்மதி சேட், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி துணைத் தலைவா் வினோத்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT