கோயம்புத்தூர்

தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை முறையாக கடைப்பிடித்து இயங்க வேண்டும்: ஆட்சியா் அறிவுரை

29th Jun 2020 11:16 PM

ADVERTISEMENT

கோவை: கோவை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாடு முழுவதும் பொதுமுடக்க காலத்தில் ஆற்று நீரின் தரம் மேம்பட்டிருப்பதாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான காரணத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பகுப்பாய்வு செய்து அந்த அறிக்கையை தீா்ப்பாயத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, கோவை மாவட்டத்தில் இயங்கும் அனைத்துத் தொழிற்சாலைகளும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து இயங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT