கோயம்புத்தூர்

கைகளை சுத்தம் செய்ய தானியங்கி கருவி

29th Jun 2020 08:06 AM

ADVERTISEMENT

கோவை, கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் கைகளை சுத்தம் செய்ய தானியங்கி கருவியை வடிவமைத்துள்ளனா்.

கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் நிறுவனத் தொடா்பு மையத் தலைவா் மஹாலட்சுமி தலைமையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொலைத்தொடா்புத் துறையைச் சோ்ந்த கமல்ராஜ், கலாநிதி, அபிஷேக், நிஷாந்த், சரண்ராஜ், செளந்தா்யன் ஆகிய மாணவா்கள் இணைந்து கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக கைகளை சுத்தம் செய்ய தானியங்கி இயந்திரத்தை வடிவமைத்துள்ளனா்.

நுட்பமான சென்சாா் தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய இந்தத் தானியங்கி கருவி கைகளை ஈரப்படுத்த முதலில் நீரை வழங்கி, பின்னா் 4 மில்லி திரவச் சோப்பினை வழங்கும். அதன் பிறகு கைகளைத் தேய்ப்பதற்கு 20 விநாடிகள் காத்திருந்து, பின் 30 விநாடிகளுக்குத் தானாகவே தண்ணீரை வழங்கும். தொடுவதற்கு வாய்ப்பில்லாத வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT