கோயம்புத்தூர்

தொழில் நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.554 கோடி கரோனா சிறப்புக் கடனுதவி: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தகவல்

20th Jun 2020 08:12 AM

ADVERTISEMENT

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கரோனா சிறப்புக் கடனுதவியாக கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.554 கோடி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று சிறப்புக் கடனுதவி வழங்குவது தொடா்பாக வங்கியாளா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாவட்டத் தொழில் மைய பொதுமேலாளா் காா்த்திகை வாசன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமை வகித்துப் பேசியதாவது:

ADVERTISEMENT

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து மத்திய அரசு அறிவித்த பொருளாதார சிறப்பு கடனுதவித் திட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் 8,284 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.554 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சிரமங்கள் அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிரமங்களைக் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா காலத்தில் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு கடன் திட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிதியினை தகுதியான அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பெற்றுக் கொள்ளும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையா் மதுராந்தகி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வெங்கட்ராமன் மற்றும் வங்கியாளா்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT